Saturday, August 9, 2008

Daily news letter 9-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 9,2008 ஸர்வதாரி ஆடி-25/ ஷாபான் – 7
Today in History:August 9

1173 - Construction of the Tower of Pisa begins, and it takes two centuries to complete.
1942 - Indian leader, Mahatma Gandhi is arrested in Bombay by British forces, launching the Quit India Movement.
1945 – Atom bomb hits Nagasaki.
For more info http://en.wikipedia.org/wiki/August_9
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)

1.2.14. வெ·காமை – (Against Covetousness)
178. அ·காமை செல்வத்திற்கு யாதெனின் வெ·காமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
What saves prosperity from swift decline?Absence of lust to make another's cherished riches thine!
Meaning :
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.
தினம் ஒரு சொல்
அருவர்- தமிழர், THE TAMILS
பொன்மொழி
அமைதியிலும் அசையா உறுதியிலுமே நமது வலிமை உள்ளது.
பழமொழி – Proverb
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

Friday, August 8, 2008

Daily news letter 8-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 8,2008 ஸர்வதாரி ஆடி-24/ ஷாபான் – 6
Today in History:
August 8, 1509 - The Emperor Krishnadeva Raya is crowned, marking the beginning of the regeneration of the Vijayanagara Empire. For more visit http://en.wikipedia.org/wiki/August_8
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.14. வெ·காமை – (Against Covetousness )

177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
Seek not increase by greed of gain acquired;That fruit matured yields never good desired.
Meaning :
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.
Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.
தினம் ஒரு சொல்
அருப்பம் - கடினம், difficulty
பொன்மொழி
வாழ்க்கை என்ற மலரில் அன்பு என்பது தேன் போன்றது.
பழமொழி – Proverb
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

Thursday, August 7, 2008

Daily news letter 7-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 7,2008 ஸர்வதாரி ஆடி-23/ ஷாபான் – 5
Today in History: August 7, 1970 1st computer chess tournament
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.14. வெ·காமை – (Against Covetousness )

176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெ·கிப்
பொல்லாத சூழக் கெடும்.
Meaning
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.
Who seeks for grace on righteous path
suffers by evil covetous wealth.
தினம் ஒரு சொல்
அருநிலை - ஆழமான நீர்நிலை, DEEP WATER
பொன்மொழி
உங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஒருநிலைப்படுத்துங்கள். வெற்றி உங்களுக்கே
பழமொழி – Proverb
பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

Wednesday, August 6, 2008

Daily news letter 6-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 6,2008 ஸர்வதாரி ஆடி-22/ ஷாபான் – 4 (கர்த்தர் உருவம் மாறிய நாள்)
Today in History: The Transfiguration of Jesus is an event reported by the Synoptic Gospels in which Jesus was transfigured upon a mountain (Matthew 17:1-9, Mark 9:2-8, Luke 9:28-36). Jesus becomes radiant, speaks with Moses and Elijah, and is called "Son" by God. The transfiguration put Jesus above the two preeminent figures of Judaism: Moses and Elijah. It also supports his identity as the Son of God. In keeping with the Messianic secret, Jesus tells the witnesses (Peter, James and John) not to tell others what they saw. To know more on the “today in history” please visit http://en.wikipedia.org/wiki/August_6
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.14. வெ·காமை – (Against Covetousness )

175. அ·கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
What gain, though lore refined of amplest reach he learn,His acts towards all mankind if covetous desire to folly turn?
Meaning :
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகப் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?
தினம் ஒரு சொல்
அருத்தநூல் - பொருள்நூல், POLITICAL ECONOMY
பொன்மொழி
உங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்யுங்கள்

Tuesday, August 5, 2008

Daily news letter 5-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 5,2008 ஸர்வதாரி ஆடி-21/ ஷாபான் – 3
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.14. வெ·காமை – (Against Covetousness )

174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
Men who have conquered sense, with sight from sordid vision freed,Desire not other's goods, e'en in the hour of sorest need.
Meaning :
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.
The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."
தினம் ஒரு சொல்
அருணி - மானின் இயல்பு கொண்ட பெண். WOMAN OF DEER LIKE NATURE

பொன்மொழி
பொறுமை பெருந்தன்மைக்கு அணிகலன்
பழமொழி – Proverb
பொறுமை கடலினும் பெரிது.

Monday, August 4, 2008

Daily news letter 4-8-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 4,2008 ஸர்வதாரி ஆடி-20/ ஷாபான் – 2
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.14. வெ·காமை – (Against Covetousness )

173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
No deeds of ill, misled by base desire,Do they, whose souls to other joys aspire.
Meaning :
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.
Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)
தினம் ஒரு சொல்
அருட்சி - மனக்குழப்பம், CINFUSION OF MIND
பொன்மொழி
சில வார்த்தைகளில் கூறுவதே சிறந்த விண்ணப்பம்
பழமொழி – Proverb
புத்திமான் பலவான்.

Sunday, August 3, 2008

Daily news letter 3-8-2008 (International Forgiveness Day) , Kuralum Porulum from Avvai Tamil Sangam

August 3,2008 ஸர்வதாரி ஆடி-19/ ஷாபான் – 1 (International Forgiveness Day)
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.14. வெ·காமை – (Against Covetousness )

172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
Through lust of gain, no deeds that retribution bring,Do they, who shrink with shame from every unjust thing.
Meaning :
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.
தினம் ஒரு சொல்
அருசி - ( அ + ருசி ) - சுவையின்மை, TASTELESSNESS
பொன்மொழி
அன்பு நிறைந்த இன்சொல், இரும்பு கதவைக் கூட திறக்கும்
பழமொழி – Proverb
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.